வேலூர் சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 03:13 pm
prisoner-escaped-from-vellore-jail

வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ரமேஷ்.  இவர் இன்று மதியம் சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு உணவுக்காக சிறைக்கு செல்லும் இடைவெளியில் தப்பி சென்றுள்ளார்.

சிறைக்குள் சென்ற கைதிகளை சிறைத்துறை காவலர் கணக்கெடுத்தபோது ரமேஷ் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய கைதி ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close