பெற்றோரை எதிர்த்து திருமணம்: காதல் தம்பதியர் வெட்டி கொலை!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 08:52 am
married-against-parents-a-loved-couple-murdered

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி, வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்காததால், பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளனர். 

இதையடுத்து, இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவும் அவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சோலைராஜா மற்றும் ஜோதி ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close