ரயில்வே கேட் அருகே ரயில்கள் நிறுத்தம்: தவழ்ந்து சென்ற கிராம மக்கள்!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 11:18 am
rail-stopped-near-by-railway-gate-villagers-crossing-the-railway

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரயில்வே கேட் முன்பு 2 சரக்கு ரயில்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால், கிராம மக்கள்  மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். 

வட மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் ரயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை ரயில்வே மார்க்கம் உள்ளது. இந்த மணப்பாறை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்  50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான வழியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் மணப்பாறை ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் ஒன்று இந்த ரயில்வே கேட் அருகே பல மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே கேட்டும் அடைக்கப்பட்டிருந்தது. 

இதனால், வாகனங்கள் செல்லமுடியாமல் அனைத்து வாகனங்களும் திரும்பி சென்றன. மேலும், மக்கள் ரயில்களின் அடியில் தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனிடையே அந்த ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மற்றொரு சரக்கு ரயிலும் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது போன்று அவ்வப்போது சரக்கு ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close