திருச்சி: பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 01:21 pm
woman-s-body-recovered-from-dilapidated-well

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள பாழைடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. நேற்றைய தினம் பேருந்து நிலையம் எதிரே உள்ள 30 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த மக்கள் கிணற்றினுள் பார்த்த போது, ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

இதையடுத்து மணப்பாறை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் வெகு நேரம் போராடி அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கடும் துர்நாற்றம் வீசியதோடு, பாழடைந்த கிணறு என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கும் இடையே கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உடலை மீட்டது அனைவரையும் நெகிழ வைத்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close