திருவானைக்காவல்: காலை நேரத்தில் மட்டும் குடிநீர் விநியோகம்!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 01:24 pm
evening-drinking-water-supply-stopped-in-srirangam

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் இன்று முதல் தினமும் காலை நேரத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவானைக்காவல் பகுதிகளில், மாநகராட்சி சார்பில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருவானைக்காவல் பகுதியில் உள்ள 1 முதல் 6 வரையிலான வார்டுகளில் இன்று முதல் தினமும் காலை நேரத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும், மாலை நேர குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்  தகவல் வெளியிட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close