கரும் புகையை கக்கிய அரசு பேருந்தின் தகுதி சான்றிதழ் ரத்து!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 03:47 pm
cancellation-of-government-bus-certificate

கோவையில் கரும் புகையை வெளியிட்டவாறு சென்ற அரசு பேருந்தின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

கோவை - சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் நேற்று கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது  அவ்வழியாக கரும் புகையை வெளியிட்டவாறு பயணிகளோடு வந்த ' 14"ஏ" வழித்தட எண் கொண்ட பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை வேறு பேருந்திற்கு மாற்றிவிட்டு பேருந்தை போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த அலுவலகர் ராஜூ தகுதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூரை அடுத்த ஆலந்துறை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று புகையை வெளியிட்டவாறு சென்ற வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close