மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 04:24 pm
if-involved-in-sand-smuggling-they-will-be-arrested

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திருச்சி மண்டல காவல்துறைத் துணைத் தலைவராக வி.பாலகிருஷ்ணன் இன்று  பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாலகிருஷ்ணன், பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் அளிக்கும் வகையில், புகார் மீது முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்து  உறுதிப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்  என தெரிவித்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை, இணைப்பு சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுக்க எல்.இ.டி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். 

மணல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டுவந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்த பாலகிருஷ்ணன், ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close