திருச்சி: குடியிருப்பு பகுதியின் மத்தியிலுள்ள வீட்டில் தீ விபத்து!

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 08:41 am
trichy-a-house-fire-in-the-middle-of-a-residential-area

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவல் சன்னதி தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவர் நேற்றைய தினம் மகன் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டின் மேற்கூரை தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தீ மளமளவென  வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் உள்ள ஏசி, இருசக்கர வாகனம், தங்க நகைகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமாகின. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close