மணப்பாறை: மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர்!

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 12:26 pm
mysterious-death-of-a-young-man

மணப்பாறை அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்ட  காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள குப்பானூரைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (35). ஓட்டல் தொழிலாளியான இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாண்டிசெல்வத்திற்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பாண்டிசெல்வம் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் புத்தாநத்தம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் பாண்டி செல்வன் இறந்த நிலையில் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டனர். 

அப்போது, பாண்டி செல்வத்தின் உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in  

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close