பருவமழை முன்னெச்சரிக்கை:பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 04:10 pm
safety-rehearsal-as-a-precautionary-measure

கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று தீயைணைப்பு துறை வீரர்களுக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், கமாண்டோ, நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது?, முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது, தேங்கிய நீரை வெளியேற்றுவது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close