அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வேக்கு குவியும் பாராட்டுகள்!

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jul, 2019 05:50 pm
southern-railway-announces-special-trains-to-kanchipuram

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜ கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கிறது.

காஞ்சிபுரம் அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒர் முறை நீரிலிருந்து வெளிவந்து மக்களுக்கு தரிசனம் வழங்கிவருவதன் சிறப்பையும், அதற்கு தினசரி லட்சக்கணக்காணோர் திரளாக காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை 48 நாட்களுக்கு வணங்கிச் செல்வர் என்பதையும் தமிழக  பாரதிய ஜனதாகட்சியினர் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக்கூறி, அதற்கு சிறப்பு ரயிர்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

அதையடுத்து ரியல்வே அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயலிடம் எடுத்து கூறி சிறப்பு ரயிர் விட ஏற்பாடு செய்யுமாறு வேண்டினார்.

இதையடுத்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு, (அதாவது ஜூலை 6ஆம் தேதி) நாளைக் காலையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாத தெற்கு ரயில்வே அறிவித்து அதுதொடர்பான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து காலை 4.25 மணிக்கு முதல் ரயில் காஞ்சிபுரத்திற்கு புறப்படும். அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து ரயில்கள் வருகிற 6 ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பக்தர்களும் வாசகர்களும்   இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும்படி நியூஸ்டிஎம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமின்றி மக்களில் தேவையறிந்து விரைந்து செயல்பட்ட தென்னக ரயில்வே அதிகாரிகளையும் நியூஸ் டிம் சார்பில் வாழ்த்துகிறோம்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close