பொள்ளாச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 12:36 pm
pollachi-16-year-old-schoolgirl-sexually-abuses

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குமரன் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிறிது காலத்தில் மாணவியின் மனதில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட அமானுல்லா தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், இதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதோடு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், சித்ரவதையை தாங்க முடியாத மாணவி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொள்ளாச்சியில் இளைஞர்கள், பள்ளி மாணவிகளை ஏமாற்றி இது போன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுவது அதிமாகி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close