சேலம்: நூதன முறையில் மணல் கடத்தல் - 2 லாரிகள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 08:56 am
salem-sand-smuggling-2-trucks-seized

நாமக்கலில் இருந்து சேலம் வழியாக நூதன முறையில் மணல் கடத்தி வந்த 2 லாரிகளை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது எம்சாண்ட் என்ற செயற்கை மணல் கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மணல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி  நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்துவதாக  சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 சரக்கு லாரிகளை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சரக்கு லாரிகளை போல் வடிவமைத்து மணல்களை கொட்டி, அதன் மேல் தேங்காய் மட்டைகளை போட்டு முழுவதும் மூடிய படி இருந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணல் லாரி உரிமையாளர்கள் உடனடியாக வருவாய் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வருவாய்த்துறையினர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close