ராமநாதபுரம்: 4 மீனவர்கள் மாயம்!

  அனிதா   | Last Modified : 06 Jul, 2019 10:48 am
ramanathapuram-4-fishermen-missing

ராமநாதபுரம்  மீனவர்கள் 4 பேர் மாயமானதால் பாம்பன் பகுதிகளில் பதற்றம் நிலவியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த அந்தோணி, வினோத் உட்பட 4 பேர் கடந்த 3ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், 2 நாட்கள் ஆகியும் மீனவர்கள் கரைதிரும்பவில்லை. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவ குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close