வேலூர் காவல் ஆய்வாளருக்கு 50 வீடுகள்: ரெய்டில் அம்பலம்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 03:10 pm
50-houses-for-vellore-police-inspector-exposed-in-raid

வேலூர் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜ். இவர் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் ஆய்வாளருக்கு சொந்தமான இடையான்சாத்து மண்டபம் சாலை, ஊசூர் நெல்லுபாளையத்தில் உள்ள 2 வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில், சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரமேஷ்ராஜ்க்கு சுமார் 50 வீடுகள் இருப்பதும் ரெய்டில் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே காவல் ஆய்வாளர் ராமேஷ் ராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close