குடி போதையில் மாற்று திறனாளியை  அடித்து கொலை செய்த வாலிபர்!

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 12:55 pm
young-man-killed-differently-abled-man-in-coimbatore

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் இரயில்களில் லாட்டரி விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அதே பகுதியை சேர்ந்த சிக்கந்தர் என்பவரது மகன் அம்ஜித்கான் என்ற வாலிபருடம் லோகநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அம்ஜித்கானும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பால மாறியுள்ளது.  அப்போது அம்ஜித்கான் லோகநாதனை கல்லால் தாக்கி உள்ளார். இதில் லோகநாதன் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லோகநாதனை அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இன்று அதிகாலையில்  சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து அம்ஜித்கானை தேடிவருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close