சேலம்: மத்திய குழுவின் நீர் மேலாண்மை ஆய்வு கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 02:10 pm
a-meeting-of-the-central-committee-on-water-management-was-held

சேலம் மாவட்டத்தில் நீர் மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணைச் செயலாளர் வெ. திருப்புகழ் தலைமையிலான 9 குழுக்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 'ஜல் சக்தி அபியான்' என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுவது குறித்தும்,  மக்களிடையே நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீரை உயர்த்துவது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காகவும்,  பல்வேறு பகுதிகளில் நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கிடவும், நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை  ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்டத்தின் இணைச் செயலாளர் வெ. திருப்புகழ் தலைமையிலான 16 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 9 குழுக்கள் ஜூலை 8 முதல் ஜூலை 11 வரை 4 நாள்களுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வு  மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close