கணவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மனைவி  சுடுகாட்டில் சிக்கினார்

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 01:18 pm
the-wife-who-escaped-after-killing-her-husband-was-trapped-in-manaparai

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வத்தமணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (42).  கல் உடைக்கும் தொழிலாளியான, இவரின் மனைவி பஞ்சவர்ணம். சமீபத்தில்  கணவன் மனைவிக்கு  இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில், முருகேசனை பஞ்சவர்ணம் இரும்பு ஊதுகுழலால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கணவன் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த  பஞ்சவர்ணம், தலைமறைவானார். பின்னர் தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த  வையம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து தலைமறைவான பஞ்சவர்ணத்தை தேடி வந்தனர். 

இந்நிலையில், இன்று முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, உடல் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கணவரின் உடலை பார்க்க வந்த பஞ்சவர்ணத்தை, சுடுகாட்டில் மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close