கோவை அருகே  முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 02:11 pm
five-arrested-for-hunting-rabbit-near-coimbatore

கோவை மதுக்கரை வனசரகத்திற்குட்ட பாப்பம்பட்டி அருகே சிண்ணகுயிலி  கிராமம் உள்ளது. இங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில், சிலர் கன்னி வைத்து முயல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நிலத்தில் கன்னி வைத்து முயல் பிடித்த அதே பகுதியை சேர்ந்த மருதாசலம், அசோக், ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், காளிமுத்து ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு  19 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.  அதோடு வேட்டையில் பிடிபட்ட  முயல் காட்டில் விடப்பட்டது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close