கோவையில் முகவரி கேட்பது போல நடித்து, மூதாட்டியிடம் செயின் பறிப்பு

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 02:12 pm
robbery-to-the-old-lady-in-coimbatore

கோவை குனியமுத்தூரை அடுத்த மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி முருகாத்தாள் (69).  இவர் நேற்று காலை கடைக்கு சென்றுவிட்டு சுந்தராபுரம் மாச்சம்பாளையம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில்  வந்த மூன்று இளைஞர்கள் முருகாத்தாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது திடிரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த  4 சவரன் தங்க சங்கிலியை  பறித்து விட்டு மூவரும் தப்பி சென்றுள்ளனர். பின்னர் மூதாட்டி கூச்சலிட்டதை அடுத்து செயினை பறித்தவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்  தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக முருகாத்தாள் கொடுத்த புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close