கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைது!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 08:38 am
dmk-s-union-secretary-son-arrested-in-murder-case

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சரண்ராஜ் கொலை வழக்கில் திமுக பிரமுகரின் மகன்  உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதும், திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் என்பவரின் மகன் பூவரசன் உட்பட 6 பேர் அவரை கட்டையால் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார். பூவரசன் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close