மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 10:02 am
8-year-old-boy-death-by-electricity-struck

திருவண்ணாமலையில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பணி இடையூறாக இருந்த மின் ஒயர்களை பிடிங்கி பணியாளர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் போட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து 8 வயது சிறுவன் ரகுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்கம்பிகளை அகற்றாத அதிகாரிகளின் அலட்சியத்தாலும், மெத்தனப் போக்காலும் சிறுவன் உயிரிழந்ததாக  கூறி சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close