ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆனிதிருமஞ்சனவிழா!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 01:14 pm
jambukeswarar-temple-function

திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், செங்கோட் சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஆண்டு தோறும் சிவ ஸ்தலங்களில் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தால் அல்லது சிதம்பரம் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலே மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். 

அந்த வகையில், நேற்று மாலை காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் கோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று அதிகாலை நடராஜருக்கு (உற்சவருக்கு) பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் என பன்னிரு வகையான பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகமும், தீபாராதனையையும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் பல்லாக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்திரு வீதி உலாவின் போது  அம்பாள், விநாயகர், முருகன், சண்டீகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நான்காம் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டுச் சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close