முகிலனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 10:11 am
15-days-jail-custody-to-mukhilan

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி ஆந்திர போலீசால் முகிலன் மீட்கப்பட்டார். இதனிடையே கடந்த மார்ச் மாதம் கரூரை சேர்ந்த பெண் ஒருவர் முகிலனுக்கு எதிராக குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதில், ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும் இது போன்று பலமுறை பலாத்காரம் செய்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடந்த 7ஆம் தேதி முகிலனை கைது செய்தனர். இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி முகிலனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close