கொலை வழக்கில் மின்சார வாரியத்தின் பெண் ஊழியர் உட்பட 5 பேர் கைது

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 11:44 am
five-person-arrested-including-woman-employee-of-electricity-board

திருவெறும்பூர் அருகே மீன் பண்ணை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மின்சார வாரிய பெண் உதவி பொறியாளர் உட்பட ஐந்து பேரை   போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலே குமரேச புரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் ரஜினி (எ) கருப்பையா (32). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர் ரஞ்சித்தோடு  கீழே குமரபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து ரஜினியை கொலை செய்துவிட்டு ரஞ்சித்தையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குற்றவாளிகள் காரில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த காரை கிருஷ்ணா சமுத்திரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த காரில் இருந்த நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த குருபாகரன் ( 46), மேல குமரேச புரத்தைச் சேர்ந்த கார்த்தி (23), கைலாசபுரம் வ உ சி நகரை சேர்ந்த சசிகுமார் (22), குருபாகரனின் மனைவி நித்தியா (40) காட்டூர் வின் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (எ) குட்டி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதில், நித்திய என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. கொலை செய்வதற்காக காரணம் குறித்து போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "ரஜினியின் சொந்த ஊர் கள்ள பெரம்பூர் என்றும் ரஜினிக்கும் குருபாகரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், ரஜியின் மீன் பண்ணையில் ரூ. 3 லட்சம் கொடுத்து பங்குதாரராக சேர்ந்து கொண்டு குருபாகரன், மீன் பண்ணை நலிவடைந்ததையடுத்து தன்னுடைய பங்கு தொகையை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, தன்னிடம் பணம் இல்லை தன்னுடைய காரை வைத்துக்கொள்ளும்படி கூறி காரை ஒப்படைத்துள்ளார். 

சிறிது நாட்களுக்கு பின்னர், அந்த காரை விற்று பணம் தருவதாக கூறி காரை வாங்கி சென்று விற்றுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி, நித்யாவிற்கு போன் செய்து தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பணம் போனால் போகட்டும் ஆனால் ரஜினியை விட கூடாது என்று  தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அவரை கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பிச் சென்ற மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close