திருச்சி விமானநிலையத்தில் ரூ17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 12:11 pm
gold-seized-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 17 லட்சம் மதிப்புடைய அரை கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த தியாகராஜன் மற்றும் மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி வீரபத்திரன் ஆகிய இருவரும் ரூ.17 லட்சம் மதிப்பிலான 500 கிராம் தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close