வட்டார போக்குவரத்து அலுவலத்தில் நின்ற ஆம்னி பேருந்தை திருடியவர் கைது!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 04:01 pm
man-arrested-for-stealing-omni-bus-from-regional-transport-office

திருச்சி, பிராட்டியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை வரி கட்டாமல் ஓட்டிவந்த ரூ.9 லட்சம் மதிப்புடைய ஆம்னி பேருந்து ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தினர். கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து அந்த ஆம்னி பேருந்தை திருடி சென்றுள்ளனர். 

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்களை ஆய்வு செய்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அந்த நபர் பிடிப்பட்டார். 

அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுயம்பு என்பதும், ஆம்னி பேருந்தை அவர் மட்டுமே திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.9 லட்சம் மதிப்புடைய ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்தை கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close