சாலை விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 09:48 am
3-women-killed-in-road-accident

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜம்மாள் உட்பட 6 பேர் காரில் தூத்துக்குடி நோக்கி சென்றுள்ளனர். கார் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த ராஜம்மாள், ராஜாராம், சரோஜா ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், கார் ஓட்டுநர்  சுகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close