இயற்கை வளம் பொறிக்கப்பட்ட தபால் தலை கண்காட்சி!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 04:39 pm
natural-resources-stamp-exhibition

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தபால் தலை கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்து செல்கின்றனர்.

புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றங்களை தடுக்க இயற்கையைப் பேண வேண்டும், இயற்கையோடு இசைந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஜூலை மாதம் 28ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் துறை சார்பில்  இயற்கை பெக்ஸ் - 2019 என்ற பெயரில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி இன்று தொடங்கியது. இக்கண்காட்சியினை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில், நீர்வளம், நிலவளம் போன்ற இயற்கை வளங்கள், ஸ்வச் பாரத் திட்டம், பருவநிலை மாற்றம், பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்ட  உருவங்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்து செல்கின்றனர். 

இது தொடர்பாக பேசிய மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி, " இந்த கண்காட்சி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆதார் பதிவு செய்வதற்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மக்களின் வசதிக்காக 15 நாட்களுக்கு கூடுதல் கவுண்டர்கள் ஏற்படுத்தப்படும் என்றும் எல்லா அஞ்சல் அலுவலகத்திலும்  ஆதார் சேவை மையங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் சுமதி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close