ஆற்றங்கரையில் வசித்தும் குடிக்க தண்ணீர் இல்லை: சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 11:58 am
women-involved-in-roadblocks

திருச்சி, திருவானைக்காவல் அருகே உள்ள  குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்  சுமார் 432  குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள்  கடந்த 10 நாட்களாக தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் வசித்தும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த  சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே நடைபெற்ற இந்த சாலை மாறியலால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close