கும்பகோணம்: அருள்மிகு பாண்டுரங்கர் சுவாமி கோவிலில்  ஆஷான  ஏகாதசி விழா! 

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 12:54 pm
ashan-ekadasi-festival-at-arulmigu-panduranga-swami-temple-in-kumbakonam

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள பாண்டுரங்கர் சுவாமி கோவிலில் புகழ்பெற்ற கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானம் சார்பில் ஆஷான ஏகாதசியை முன்னிட்டு வராகரி யாத்திரையில் ராம நாம கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வழிபட்டனர்

கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தில்  அருள்மிகு பாண்டுரங்கர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்   ஆண்டுதோறும் ஆஷான ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் வராகரி யாத்திரை நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

சிறப்பு வாய்ந்த ஆஷான  ஏகாதசியான இன்று நாட்டின் பல வைணவத் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் குறிப்பாக பண்டரிபுரம் பாண்டுரங்கனை  பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து தரிசனம் மேற்கொள்வார்கள். 

அந்த வகையில் இன்று  கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயிலுக்கு  கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் இருந்து பாண்டுரங்கன் ருக்மணி தாயார் ரத யாத்திரையுடன்   பக்தர்கள் நாம கோஷங்கள் நாம கீர்த்தனைகள் பாடியவாறு பாதயாத்திரையாக கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சம்ஸ்தான கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close