கும்பகோணம்: அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 02:59 pm
free-laptops-were-provided-to-government-school-students-in-kumbakonam

தமிழக அரசு உத்தரவுப்படி கும்பகோணத்தில் அரசு மகளிர் மேல்லைப் பள்ளியில் பயிலும் 220 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தற்போது  தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 220 மாணவிகளுக்கு 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகளை நகரச் செயலாளர் ராம.ராமநாதன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கவிதா ஸ்ரீதர் தலைமையாசிரியர் சாந்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியர்க்கு மடிக்கணினி வழங்கினர்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close