மதுரை : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பெண்கள் கலந்து கொண்ட பேரணி

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 01:39 pm
women-rally-to-emphasize-rainwater-harvesting-in-madurai

தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும்  மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை நகரில் 100க்கும் மேற்பட்ட பெண்கள்  பேரணியாக சென்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தத பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் மழைநீர் சேமிப்போம், மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கொண்டு சென்றனர்.

பேரணியை மத்திய அரசு அதிகாரி விஷ்மிதா தேஜ், கொடி  அசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரிகளான, ராதா ராணி, சுப்பிரமணி, அங்குஸ் மாலி, ரஸ்தோகி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close