குளியலறையில் கேமரா பொருத்திய விவகாரம் : அறநிலையத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 03:59 pm
dismissal-of-hindu-charities-department-associate-director-in-madurai

கேமரா பொருத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்து அறநிலையத் துறையின் மதுரை மண்டல இணை இயக்குநர் பச்சையப்பன் அதிரடியாக இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அண்மையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் நிகழ்ச்சியில் பணி செய்ய திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி ஒருவர் அறநிலையத்துறை விடுதி குளியலறையில் 'பென் கேமரா' செட் செய்து தன்னை படம் பிடித்தாக,  மண்டல இணை இயக்குநர் பச்சையப்பன் மீது, மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். பின்னர், ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பச்சையப்பன் கைது செய்யப்பட்டார்

இதனை அடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெற்றன. அதன் முடிவில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா இந்து அறநிலையத் துறையின் இணை இயக்குனர் பச்சையப்பனை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close