நாளை வேளச்சேரி - கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 10:30 am
rail-cancellations-between-velachery-and-beach-tomorrow

சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கமிடையே நாளை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராமரிப்பு பணி காரணமாக ஜூலை14 ஆம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 2.10 மணி வரை வேளச்சேரி - கடற்கரை இடையே இருமார்க்கத்தில் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், கடற்கரை - தாம்பரம் இடையே ஜூலை 14ஆம் தேதி மின்சார ரயில்கள் வழக்கம் போல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படமாட்டாது எனவும், பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10.30  மணி முதல் மாலை 3.10 மணி வரை 15 முதல் 45 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close