மருத்துவமனைக்கு சென்றதை நோட்டமிட்டு கொள்ளை!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 10:53 am
gold-jewel-robbery-in-house

கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 18 சவரன் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிமெண்டு குடோனில் பணி செய்து வருகிறார். அவ்வபோது சமையல் வேலைக்கும் செல்வார். இந்நிலையில், நேற்றிரவு அப்துல் காதருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருடைய மனைவி அவரை ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

மேலும், வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய குழந்தைகளையும் அவருடன் அழைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 18 சவரன் நகை மற்றும் 8  ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

சிகிச்சைபெற்று வீடு திரும்பிய அப்துல் காதர் பீரோ உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடையங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று நேற்று முன்தினம்  பாபநாசத்தில் 15 பவுன் நகை மற்றும் ரூ.5000 ரொக்கம் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close