நகைகள் திருட்டு: கடைக்காரர் கண்டறிவதற்குள் போலீசார் கண்டுபிடிப்பு!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 03:50 pm
2-women-are-arrested-for-jewels-theft

திருச்சி முசிறி அருகே உள்ள நகைக்கடையில் கொலுசுகள் திருடிய பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கைகாட்டியில் 2 பெண்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார், பெண் போலீசாரை வர வழைத்து இருவரையும் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் உள்பாவாடையில் அமைக்கப்பட்டிருந்த பையில் சுமார் 15 கொலுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். 

விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த ஜான்சி ராணி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்தது. மேலும் முசிறியில் உள்ள நகைக் கடை ஒன்றில் உரிமையாளர் அசந்த நேரம் பார்த்து ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள  கால் கொலுசுகளை திருடியது தெரியவந்தது.

பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்ட பின்பு தான் இரு பெண்களும் கடையில் இருந்து கொலுசு திருடிய சம்பவமே கடை உரிமையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜான்சிராணி மற்றும் சாந்தியிடம் இருந்து கொலுசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close