மதுரையில் பழமையான பாதாள சிறைச்சாலை?

  அனிதா   | Last Modified : 14 Jul, 2019 11:56 am
is-madurai-the-oldest-underground-prison

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கிங் பணியின்போது 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. சுமார் 30 அடி அளவிற்கு பள்ளம் தோண்டி பார்க்கிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பார்க்கிங் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தின் கரை பகுதியில் திடீரென 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் வெளியே வந்துள்ளது.

தற்போது பார்க்கிங் அமைக்கும் இடத்தின் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இது பாதாள சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தூண் திடீரென வெளியே வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close