ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோவில் ஆனி திருமஞ்சனம்!

  அனிதா   | Last Modified : 14 Jul, 2019 12:26 pm
srirangam-ranganathar-temple-aani-thirumanganam

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கு நடத்தப்படும்.

அந்த வகையில் இன்று ஜேஷ்டாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, இன்று காலை கருடமண்டபத்திலிருந்து எடுத்து வந்த தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து  திருமஞ்சனம் எனப்படும் புனிதநீர் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தங்கக்குடமானது கோவில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டது.

வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் அர்ச்சகர்களால் சுமந்து வரப்பட்டது.  இந்த ஊர்வலமானது நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கிகள் சாற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் சாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close