இராணிமங்கம்மாள் அருங்காட்சியகத்தில் சிலைகள் திருடிய வழக்கு: மேலும் ஒருவர் கைது!

  அனிதா   | Last Modified : 14 Jul, 2019 03:18 pm
man-arrested-for-stealing-idols-at-museum

திருச்சி இராணிமங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த 2009ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டையில் உள்ள இராணிமங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருட்டு போனது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  வழக்கில் இதுவரை 21 சிலைகள்  மீட்கப்பட்டுள்ளன. 

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தேடிவந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் சோனாலி என்ற இடத்தில் பதுங்கியிருந்த காரைக்குடியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவரை கைது செய்துள்ளனர். இன்று தமிழகம் அழைத்து வந்த போலீசார் கும்பகோணத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ராம்குமாரை ஆஜர்படுத்தினர். 

கைது செய்யப்பட்ட ராம்குமாரை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சீனிவாச ராமானுஜன் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய 9 பேரில் ராம்குமாரை சேர்த்து இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close