திருச்சி: பசுமை மாரத்தான் போட்டி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  அனிதா   | Last Modified : 14 Jul, 2019 04:18 pm
trichy-green-marathon-competition-over-thousand-participants

திருச்சியில் நடைபெற்ற பசுமை மாரத்தான் போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். 

திருச்சி மாவட்டம் லால்குடியில், விவசாயம், நீர்நிலைகளை காப்பாற்ற வலியுறுத்தி  பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை  லால்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி கொடியசைத்து துவக்கி் வைத்தார். 

இதில் ஆண்கள் பிரிவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.  

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடம் பங்கேற்றனர்.போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மாவட்ட காவல் துறை இணை ஆணையர் மயில்வாகனன் மற்றும் கோட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close