மதுரை: மாணவன் உயிரிழப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம்!

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 09:12 am
madurai-shops-closed-protest-over-student-deaths

மதுரையில் கோவில் திருவிழாவின் போது மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், அச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மேலூர் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடுக்கம்பட்டியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள், கட்டைகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மாணவன் ரம்பு என்பவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், மாணவன் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலூர் பகுதி வெறுச்சோடி காணப்படுகிறது. மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close