வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 06:43 pm
three-arrested-for-fraud-in-coimbatore

அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிய தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து மூவரை கோவை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் ஸ்மார்ட் டார்ட் இண்டர்ந்நேசனல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களை தயாரித்து அனுப்பி உள்ளனர்.

 இங்கிருந்து சென்ற  நபர்கள் கொண்டு சென்ற ஆவணங்களை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் சோதனை செய்த போது அவை போலியான ஆவணங்கள் என கண்டறியப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க தூதரக உதவி மண்டல அதிகாரி அளித்த புகார் அடிப்படையில், ஸ்மார்ட் டார்ட் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தை இயக்கி வந்த பி.கே. புதூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (34), இந்திராநகர் பகுதியை சேர்ந்த அசோக் (29), பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நிவீஸ் (27) ஆகிய மூன்று பேரும் கைது செய்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close