சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து!

  அனிதா   | Last Modified : 18 Jul, 2019 01:28 pm
sudden-fire-in-a-car-on-the-road

கோவை மாவட்டம் கணியூர் டோல்கேட் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த  காரில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர் குணசேகரன், அவரது மனைவியுடன் கோவைக்கு ஸ்கார்பியோ காரில் வந்துகொண்டிருந்தார். கணியூர் சுங்கசாவடி அருகேசென்ற போது காரில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து காரை நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.

சில வினாடிகளிலேயே தீ மள மளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை வேகமாக அணைத்தனர். இந்த விபத்து குறித்து  கருமத்தபட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close