குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 09:16 am
permission-to-bathe-in-courtallam-falls

குற்றால அருவிகளில் சுற்றுப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. கடந்த மாதம் குற்றால சீசன் தொடங்கிய நிலையில், அருவியில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் விழுந்தது. இதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியதால் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது. 

கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close