மதுரை: திருவிழா கூட்டத்திற்குள் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை!

  அனிதா   | Last Modified : 20 Jul, 2019 11:57 am
madurai-famous-rowdy-murder-in-festival-crowd

மதுரையில் தெய்வ வழிபாட்டின் போது திருவிழா கூட்டத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வைகை ஆற்றின் மைய மண்டப பகுதியில் ஆடித் திருநாளை முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு திருவிழா கூட்டத்துக்குள் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜசேகர் என்ற பட்டாசுவை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தி, அரிவாளால் வெட்டியது. 

இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில், ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close