மின்சாரம் தாக்கி வெல்டிங் மேன் பலி: சந்தேக மரணம் என வழக்கு பதிவு..

  அனிதா   | Last Modified : 20 Jul, 2019 01:23 pm
welding-man-death-by-electricity-hit

கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு நிவாரணம் வழங்ககோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்பகோணத்தை அடுத்த மணல்மேடு களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர் பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கிராமத்தில் வாடகைக்கு கடை எடுத்து வெல்டிங் பட்டறை  செய்து வருகிறார். இந்த நிலையில் தனது கடையில் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு கடையில் தனது வெல்டிங் பொருட்களை வைத்து சென்ற இவர், மறுநாள் வெல்டிங் பொருட்களை எடுப்பதற்காக இரும்பு ஷட்டரை திறந்துள்ளார். 

அப்போது, மின் கசிவு காரணமாக ஜெயராமம் மீது மின்சாரம் பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜெயராமன் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு ஜெயராமன் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்த வந்தபோது, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஜெயராமன் விபத்தில் இருந்ததாக வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

இதனால், சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close