கோவை குற்றாலத்தில் நீராட சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி!

  அனிதா   | Last Modified : 24 Jul, 2019 02:28 pm
allowed-tourists-in-coimbatore-courtallam

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலத்திற்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. மேலும் சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் கடந்த 12-ம் தேதி கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. 

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 20-ம் தேதி தடை விதிக்கப்பட்டது.

அருவியில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தொடர்ந்து இந்த தடை 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மழையின் அளவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளது. இதனால், 4 நாட்களுக்குப் பிறகு இன்று கோவை குற்றாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close