கோவை: காட்டு யானைக்கு தண்ணீர், உணவு வழங்க வனத்துறை ஏற்பாடு

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 11:19 am
forest-department-arranges-water-and-food-for-wild-elephant-in-coimbatore

வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவு  காரணமாக, ஒரு வார காலமாக ஒரே இடத்தில் நிற்கும் 12 வயது பெண்  காட்டு யானைக்கு, தண்ணீர் மற்றும் உணவு வழங்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டி ஊராட்சி வால்குட்டை பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை எங்கும் நடக்க முடியாமல் நின்றுள்ளது.  இந்நிலையில், அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள், அந்த பெண் யானையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். மேலும், அந்த யானை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதால் அதற்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதோடு அந்த யானை உடல் நிலை குறைவாக இருப்பதை பார்க்கும்போது ஒரு வேளை கர்ப்பமாக இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close