ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 11:21 am
coimbatore-a-college-student-commits-suicide-attempt-in-front-of-a-train

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் படிக்கும் மாணவி மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பழனியம்மாள் தம்பதிகளின் மகள் ஜெயசூர்யா (17). இவர் ஈச்சனாரி அருகே உள்ள ரத்தினம் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை தற்கொலை செய்யும் நோக்கத்தில், விடுதியில் இருந்து வெளியே சென்று கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் வேகமாக வருவதை கண்டு பயந்து போன மாணவி தண்டவாளத்தை விட்டு எழுந்து ஓட முயற்சி செய்தார்.  

ஆனால், அதற்குள் ரயில் மாணவியின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாணவிக்கு தலை மற்றும் கை, கால் என உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close